பதிவு செய்த நாள்
08
செப்
2018
02:09
விடையூர்:விடையூர் கிராமத்தில் உள்ள மந்தவெளி அம்மன் கோவிலில், 12ல், மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடம்பத்தூர் ஒன்றியம், விடையூர் கிராமத்தில் அமைந்துள்ளது மந்தவெளி அம்மன் கோவில்.
இந்தக் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள செல்லியம்மன், வடபாதி செல்லியம்மன் மற்றும் மந்தவெளி அம்மனுக்கு, 12ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
முன்னதாக, 10ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையும், மஹா கணபதி யாகமும், கரிக்கோலம் வீதி உலாவும் நடைபெறும்.
கும்பாபிஷேக நாளான, 12ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, நான்காம் கால அவப்ருத யாக பூஜையும், மஹா தீபாராதனையும் நடைபெறும்.
அதை தொடர்ந்து, காலை, 9:55 மணிக்கு, மந்த வெளி அம்மன் விமான கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகமும், அதைத் தொடர்ந்து, மந்தவெளி அம்மன், வடபாதி செல்லி அம்மன் மற்றும் செல்லியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.
பின், காலை, 10:30 மணிக்கு மஹா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு மலர் அலங்காரத் தில், அம்மன் வீதியுலாவும் நடைபெறும்.