பதிவு செய்த நாள்
08
செப்
2018
02:09
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், வர்ணீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நந்திக்கு பால், இளநீர், தேன் உள்ளிட்ட அபிஷேகம் செய்யப்பட்டது. இதே போல், அரூர் சந்தைமேட்டில் உள்ள, வாணீஸ்வரர் கோவிலில் நடந்த வழிபாட்டில், சுவாமி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். மேலும், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.