உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் நாளை (செப்.,11ல்) திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2018 12:09
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகருக்கு சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் நாளை (செப்.,11ல்) திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் உள்ள விநாயகர் கோயில் பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது. கருவறையில் உள்ள விநாயகர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளிபட்டு வருவதால் இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என்று அழைக்கப் படுகிறார். சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் சதுர்த்தி விழா செப். 4 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் சதுர்த்தி விழாவின் எட்டாம் நாளான நாளை (செப்.11 ) மாலை 4:30 மணிக்கு வெயிலுகந்த விநாயகருக்கு சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
வட மாநிலங்களில் மட்டுமே விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது பிரசித்தி பெற்றுள்ள நிலையில், தென் தமிழகத்தில் இந்த வெயிலுகந்த விநாயகருக்கு மட்டுமே இரு தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெறுவதால், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங் களில் இருந்தும் ஆண்டுதோறும் பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுகின்றனர்