வால்பாறையில், விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஆலோசனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2018 12:09
வால்பாறை: வால்பாறையில், குறிப்பிட்ட நேரத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் போலீசார் அறிவுறுத்தினர்.
வால்பாறை தாலுகா இந்துமுன்னணி சார்பில், வரும், 13ம் தேதி வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
சிலைகள் வரும், 16ம் தேதி காலை வால்பாறை நகருக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன. நடுமலை ஆற்றில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, வால்பாறை போலீஸ் ஸ்டேஷனில், ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் திருமேனி தலைமையில் நடந்தது.
இன்ஸ்பெக்டர் பேசுகையில், ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே சிலைகளை வைக்க வேண்டும். ஊர்வலத்தின் போது, மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் கோஷ மிடக்கூடாது. விசர்ஜன ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிக்க கூடாது. எஸ்டேட் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளுக்கு இரவு நேரத்தில் இந்துமுன்னணி நிர்வாகிகள் பாது காப்பு பணியில் ஈடுபடவேண்டும். வால்பாறை நகரில், குறிப்பிட்ட நேரத்திற்குள் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்ய கொண்டு வரவேண்டும் என்றார்.