பதிவு செய்த நாள்
10
செப்
2018
01:09
காஞ்சிபுரம்:இயற்கை பேரழிவுகளின் தாக்கம் குறையவும், உலக நன்மைக்காகவும், காஞ்சி புரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பஞ்சபூத மஹா சாந்தி யாகம், நேற்று (செப்., 9ல்) நடந்தது.
இயற்கை பேரழிவுகளின் தாக்கம் குறையவும், பூமியும், அதில் உள்ள மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகளும் நலமாக வாழ, பஞ்ச பூத மஹா சாந்தி யாக குழு சார்பில், பஞ்சபூத ஸ்தலங்களில், மஹா சாந்தி யாகம் நடத்தப்படுகிறது.
அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை, ஆகாய ஸ்தலமான சிதம்பரம், நீர் ஸ்தலமான திருச்சி, வாயு ஸ்தலமான காளஹஸ்தி என, இதுவரை நான்கு பஞ்சபூத ஸ்தலங்களில், மஹா சாந்தி யாகம் நடந்துள்ளது.
பூமி ஸ்தலமான காஞ்சிபுரத்தில், ஏகாம்பரநாதர் கோவிலில், நேற்று (செப்., 9ல்), காலை, 5:00 மணிக்கு கோமாதா பூஜையுடன், இந்த யாகம் துவங்கியது.பூரண கும்பத்துடன் யாகசாலை பிரவேசம், சித்தர்கள் முறைப்படி வேள்வி, பஞ்சாட்சர வேள்வி, நடன பள்ளி மாணவ - மாணவி யரின் நாட்டியாஞ்சலி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
யாகத்தில் பஞ்சபூத மஹா சாந்தி யாக குழு தலைவர், பல மடங்களின் ஆதினங்கள், மடாதிபதி கள் உட்பட பலர் பங்கேற்றனர்.