பதிவு செய்த நாள்
10
செப்
2018
01:09
ஆர்.கே.பேட்டை:சுந்தரவல்லி, விஜயவல்லி உடனுறை சுந்தர ராஜ பெருமாளுக்கு, வரும், 14ம் தேதி துவங்கி, மூன்று நாட்களுக்கு பவித்ர உற்சவம் நடைபெற உள்ளது. 10ம் ஆண்டாக நடை பெற உள்ள உற்சவத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஆர்.கே.பேட்டையில் சுந்தரவல்லி, விஜயவல்லி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில், 1987ல், புனரமைக்கப்பட்டு, மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வரப் பட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக, ஆவணி மாதம் பவித்ர உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. 14ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு, சாலசித்தி மற்றும் அங்குரார்ப்பணத்துடன் உற்சவம் துவங்கு கிறது.மறுநாள், காலை 7:00 மணிக்கு, ஸ்தாபன திருமஞ் சனம், பவித்ர பிரதிஷ்டை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு திருவாராதனம், சாற்றுமறை நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை, காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை, திருவாராதனம் நடத்தப்படும். மாலை, 5:00 மணிக்கு உற்சவர் பெருமாள், உள்புறப்பாடு எழுந்தருளுகிறார்.
மாலை, 6:00 மணிக்கு, புனிதநீர் கலச புறப்பாடும், பத்ம பிரதக்ஷணம் செய்யப்படுகிறது. 9:00 மணிக்கு ஏகாந்த சேவையுடன், உற்சவம் நிறைவு பெறுகிறது.