பதிவு செய்த நாள்
10
செப்
2018
01:09
திருவண்ணாமலை: நீதிபதி உத்தரவின் பேரில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 4.83 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவறை பழுதுபார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 6ல், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அருணாசலேஸ்வரர் கோவில் தூய்மை பணி, அலுவலக பதிவேடுகள் பராமரிப்பு கூடம், அன்னதான கூடம், கோசாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், ஆய்வு செய்தார். அப்போது, கோவில் வளாகம், கழிவறை தூய்மையின்றியும், கோசாலையில் பீர் பாட்டில் இருந்தது உள்ளிட்ட பல்வேறு குறைகளை நீதிபதி கண்டறிந்தார். உடனடியாக கோவில் வளாகம், கழிவறையை தூய்மைப்படுத்த கோவில் ஊழியர்களுக்கு, அவர் உத்தரவிட்டார். இதையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில் தற்போது, 4.83 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவறை பழுதுபார்ப்பு பணி நடந்து வருகிறது. மேலும், கிழக்கு ராஜகோபுரம், வடக்கு அம்மன் கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில், வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த தடுப்புக்கம்பி அமைக்கும் பணிகளும், நடந்து வருகிறது. இதை, கோவில் இணை ஆணையர் ஞானசேகர் கண்காணித்து வருகிறார்.