பதிவு செய்த நாள்
14
செப்
2018
03:09
கரூர்: கரூர் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெள்ளியணை, கரூர், வேலாயுதம்பாளையம், பசுபதிபாளையம், வாங்கல், க.பரமத்தி, அரவக்குறிச்சி உட்பட, 308 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிங்கமுக விநாயகர், லட்சுமி விநாயகர் என பல்வேறு வகையான விநாயகர் சிலைகளுக்கு, கொழுக்கட்டை வைத்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மஹாமூர்த்தி ஹோமங்கள், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.