பதிவு செய்த நாள்
14
செப்
2018
03:09
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், விநாயகர் சதுர்த்தி விழா, கோலா கலமாக நேற்று (செப்.,13ல்) கொண்டாடப்பட்டது. கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி பஞ்., விட்டுகட்டி மகா கணபதி விநாயகர் கோவிலில், சிறப்பு யாக வேள்வி பூஜை நடந்தது. பின், விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பழரசம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சந்தனகாப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. லாலாப்பேட்டை சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
* கிருஷ்ணராயபுரம் கடைவீதியில், பகவதி குரூப்ஸ் சார்பில், விநாயகர் சிலை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
* மாயனூர் பஸ் நிறுத்தம் அருகில், வண்ண விநாயகர் சிலை வைத்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. மாயனூர் பகுதி மக்கள் பங்கேற்றனர்.