Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்னை மீனாக்ஷி சக்தி வடிவினள் யோக சாதனை
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 15. அன்னை மீனாக்ஷி சக்தி வடிவினள்
உடலில் ஆதார இடங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2018
04:09

மூலாதாரம் என்பது கருவாயில் - எருவாயிற்கு இடையே அமைந்துள்ளது
இது பிருத்வி என்று பூமியின் அம்சமாய் அமைகிறது
ஸ்வாதிஷ்டானம் குறியின் அடிபாகத்தில் இருக்கிறது. இது அப்பு - நீர் அம்சமாகிறது.
மணிபூரகம் என்பது நாபியில் இருப்பது. இது தேயு - நெருப்பு அம்சமாகிறது.
அனாகதம் என்பது இருதய ஸ்தானம் இது வாயு - வளி அம்சம் எனப்படுகிறது
விசுத்தி என்பது கழுத்தின் உட்பக்கத்தில் இருப்பது. இது ஆகாச - வெளி அம்சம்.

ஆக்ஞை என்பது இரு புருவங்களுக்கு மத்தியில் இருப்பது இது ""மனஸ் தத்துவம் அதாவது மன மாயை என்றிட்ட காரண தத்துவமாகும். இவ்வாறாய் உடலின் பாகங்களான நாபி, இருதயம், கழுத்து எனப் பகுதிகளாகச் சொல்வதை எல்லாம் அந்தந்த ஸ்தானங்களுக்கு நேராய் இருப்பது. சுழுமுனை நாடியில் அந்தந்த ஆதார ஸ்தனாங்கள் இருப்பதாய் அறிந்து கொள்ள வேண்டும்.

சுழுமுனையின் இரண்டு பக்கங்களின் இடகலை பிங்கலை என்ற சந்திர நாடி சூரிய நாடிகள் மூலாதாரத்தினின்றும் புறப்பட்டு மேல் நோக்கிச் சென்று மூன்று இடங்களில் (ஃ) சுழுமுனையினைத் தொட்டுக் கொண்டும் ஒன்றை ஒன்று தொட்டபடியும் இடது சாரி வலது சாரியாக மாறி மாறி மேலே செல்லும். இவ்வாறு மூன்று நாடிகளும் சேரும் இடங்களுக்கு கிரந்திகள் அல்லது முடிச்சுகள் என்று பெயர். ஒரு கிரந்திக்கும் மற்றொரு கிரந்திக்கும் இடையில் இருக்கும் இடத்திற்கு மண்டலங்கள் என்று பெயர். ஒவ்வொரு மண்டலமும் இரண்டு ஆதாரங்களாகப் பிரிந்து காணப்படுகின்றன. மூலாதாரத்தில் ஆரம்பித்த இம்மூன்று நாடிகளும் இடது சாரி வலது சாரியாய் மேலே சென்று ஆக்ஞை என்ற புருவ மத்தியில் ஒன்று சேர்வதாகும். இவ்வண்ணமே மூன்றும் சேர்வதால் ஆக்ஞைக்கு திரிவேணி சங்கமம் என்று பெயர் உண்டு.

 கிரந்திகளுக்கு கீழிலிருந்து மேல் வரிசையில் பிரம்ம கிரந்தி ருத்ர கிரந்தி, விஷ்ணு கிரந்தி எனப் பெயருறுகிறது. மூலாதாரத்தில் இருந்து பிரம்ம கிரந்தி வரை உள்ள பாகத்திற்கு அக்னி மண்டலம் என்று பெயர். இதில் மூலாதாரம். ஸ்வாதிஷ்டானம் என்ற இரண்டு ஆதார ஸ்தனாங்கள் இருக்கின்றன. பிரம்ம கிரந்திக்கும் விஷ்ணு கிரந்திக்கும் இடையில் உள்ளது சூரிய மண்டலம். இதில் மணிபூரகமும் அனாகதமும் உள்ளன. விஷ்ணு கிரந்திக்கும் ருத்ர கிரந்திக்கும் இடையில் உள்ளது சந்திர மண்டலம். இதில் விசுத்தியும் ஆக்ஞையும் உள்ளன.! ஆகவே ஆறு ஆதாரங்கள், மூன்று மண்டலங்கள் மூன்று கிரந்திகள் ஆக 12 ஸ்தானங்கள் ஏற்படுகின்றன.

நமக்கு அறியும் வண்ணம் இவற்றைக்குறிக்கும் வண்ணம் அவ்வை முனியின் விநாயகர் அகவலில் இது பற்றி விளக்கமாக பாடியுள்ளார். ஆகவே முன் கூறிய குண்டலினி சக்தி என்பது பாம்பு போன்ற உருவமுடையதாய்க் கோடி சூரியப் பிரகாசமுடையதாய், தாமரைத்தண்டின் உள்ளிருக்கும் நூலினும் மெல்லியதாய் தன்னையே மூன்றரைச் சுற்று சுற்றிக் கொண்டு மூலாதாரச் ஷேத்திரத்தில் அன்புச் சாதகனுக்காய் எந்நேரமும் படமெடுத்தபடி உறங்கிக் கொண்டிருக்கிறது. இக்குண்டலினி சக்தியை எழுப்பி மேலேறச் செய்ய யோக சாதனையாலோ அல்லது உபாசனையாலோ மேலெழுப்ப நிச்சயம் இயலும். எனவே சுழுமுனை நாடி வாழியாக (நடு நாடி) வழியாக மேலே ஏறிச் செல்லும்போது ஒவ்வொரு ஆதார சக்கரங்களையும் பேதித்துக்கொண்டு (தொடர்பு ஏற்படுத்தி கலந்து கொண்டு) மூன்று கிரந்திகளையும் ஊடுருவிச் சென்று மூன்று மண்டலங்களையும் தாண்டி ஆக்ஞை சென்று அதற்கு மேலுள்ள சகஸ்ர கமலமென்ற ஆயிரம் இதழ்த் தாமரையின் மத்தியில் இருக்கும் கன்னிகா என்ற சக்தியுடன் சக்தியாய்க் கலந்து அங்கே பெருகும் பேரானந்த நிலையில் அம்ருதம் அமுது பெருகி மீண்டும் பெருகச்செய்து மீண்டும் சுழுமுனை நடு நாடியின் வழியாக கீழ்நோக்கி பிரவாகம் எடுத்து பெருக்கெடுத்து உடலின் 72000 நாடிகளையும் நனைக்கும்.

இந்த நிலை அடைந்த சாதகன் சாகாநிலை எய்தி விடுவான். அவனுக்கு இறப்பு என்பது இல்லை. இவ்வாறு ஆயிரம் இதழ்த் தாமரையின் மைய பீடத்தின் மேல் அமர்ந்து இருப்பை துணை செய்து கொண்டவனே சித்துகளைப் பெற்ற சித்தனாவான்.

நிலமிசை நீடுவாழ்வான் மலர்மிசை ஏகினான்
மானடி சேர்ந்தார்.- என்ற வள்ளுவப் பெருந்தகை கூற்றின் உண்மைப் பொருளாகும். முன்பு கூறிய யோக சாதனை மற்றும் உபாசனா மூலம் குண்டலினியை எழுப்பலாம் என்பதின் பொருள் யாதென்று கூறப்புகின்!

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 15. அன்னை மீனாக்ஷி சக்தி வடிவினள் »
பிரபஞ்சத்திற்கு அன்னையும் பிதாவுமாக இருப்பவர்கள் சக்தியும் சிவமும் ஆகும். நமது உடலைச் சூத்திர ... மேலும்
 

யோக சாதனை செப்டம்பர் 14,2018

சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி அருளிய அஷ்டாங்க வழியின் ஒன்றான பிராணாயாமம் என்ற பிராண ஆகுதி முறையாகும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar