Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடலில் ஆதார இடங்கள்
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 15. அன்னை மீனாக்ஷி சக்தி வடிவினள்
யோக சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2018
04:09

சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி அருளிய அஷ்டாங்க வழியின் ஒன்றான பிராணாயாமம் என்ற பிராண ஆகுதி முறையாகும். முறைப்படி மூச்செடுத்து மூச்சடக்கி மூச்சை சமர்ப்பிப்பதாகும். இடகலை பிங்கலை என்றும் சுழுமுனை என்றும் வாசியோகம் என்றும் குறிக்கப்படும் தந்திர முறையே யோக சாதனையாகும்.

உபாசனா சாதனம்
உபாசனை என்ற மந்திர உருக்களை மூன்று வழியில் உபாசிப்பதாகும்.
 1. வாசிகம்
 2. மானஸம்
 3. உபாம்சு

மேலும் உபாசனா முறை மந்திரம் யந்திரம் என்ற இரு முறைகளையும் கொண்டது ஆகும். மந்திரம், மந்திர எழுத்துக்களை உச்சாடனம் செய்வதாகும். மேற்கூறிய  மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்று. யந்திர வழிபாடு என்பது ரிஷிகளால் உருவாக்கப்பட்ட யந்திர வரிகளால் இயக்கியதாகும். அத்தகைய யந்திரங்களின் பல்வேறு விதமான வரிவடிவங்களைக் கொண்ட யந்திரங்களை உருவாக்கி அதனுள் ரிஷிகளின் மஹாசக்தியை மஹா தவ சக்தியை அதனுள் புகுத்தி அவ் யந்திரத்தினை வழிபடுவதே யந்திர வழிபாட்டு முறை.

உதாரணம் : சுதர்சன சக்கரம், ஸ்ரீ சக்கரம் போன்ற சக்கரங்களின் வழிபாட்டு முறை என உரைத்துப்போற்றுவார்கள். சௌந்தர்ய லஹரி என்பது ஸ்ரீ ஆதிசங்கரரின் கூற்றான நூலின் வழி இறைவியைப் போற்றிப்பாடிய பாடலின் தொகுப்பு இது ஆகும்.

சௌந்தர்ய லஹரியில் குண்டலினி ஷட்சக்கர ஆறாதார சக்கர தளம் பேதனம் செய்வது பற்றிய விளக்கங்களையும் அன்னையின் ஸ்தூல, சூட்சும, தம ரூபங்களையும் : பஞ்ச தஷாட்சரி மந்திரங்களையும் அதன் இருபெரு பிரிவுகளான காதி வித்யை, ஹாதி வித்யை என்பதன் மூலமும் அன்னையின் 43 கோண நாற்பத்தி முக்கோண யந்திரத்தை முறையாக பூஜிப்பதாலும் பெரும் சக்தி பெறலாம் என்பதை மேனாட்டிலிருந்து உத்யோகம் பார்க்க இந்தியா வந்த நழ்ண் Sri john woodroffe என்பவர் ஆர்தர் ஏவலன் என்ற புனைப்பெயரில் நமது சாக்த தந்திரங்கள் பலவற்றை கற்றுணர்ந்து பல நூல்களை மொழிபெயர்த்து எழுதியுள்ளார். அவற்றில் நங்ழ்ல்ங்ய்ற் டர்ஜ்ங்ழ் என்ற ஆங்கில நூலில் குண்டலினியைப் பற்றி மிக விரிவாக தற்கால விஞ்ஞான முறையில் விளக்கியுள்ளார்.

நம் மதுரையம்பதியில் பெரும்புண்ணியங்களையும், இறையனுபூதியையும் இங்கு வாழ்வோர்க்கு அள்ளித்தருபவள் மதுரையின் அமுது ஸ்ரீ ராஜ மாதங்கி எனப்படும் ஸ்ரீ மீனாக்ஷி அன்னையாவாள். இவள் வாழும் பழம்பதியான இம்மதுரையை ஆகம ரீதியாக துவாதசாந்த புரி மற்றும் துவாதசாந்த ஷேத்திரம் என்றும் கூறுவார்கள். துவாதசாந்தம் எனில் பணிரெண்டும், பணிரெண்டின் முடிவுமாகும். மேலும் பணிரெண்டிற்கப்பாற்பட்டதென்று பொருள். முன்பு கூறியபடி ஆறு ஆதாரங்கள்,மூன்று மண்டலங்கள்,மூன்று கிரந்திகள் ஆகிய பனிரெண்டிற்கும் அப்பாற்பட்டவள் இம்மதுரையின் நாயகி அரசி அன்னை யாவாள்.

 இவளின் பனிரெண்டு நிலைகளுக்கு அப்பாற்பட்ட ஸகஸ்ராஹார கமலத்தில் இருப்பவளுக்கு சக்தி வடிவான மனோன்மணி என்ற பிரியாவிடைத் தாயாகும். சிவ ஐக்கிய சொரூபமாய் இருப்பவள் என்றும் மதுரை நாயகியாய், தென்னாடு போற்றும் எல்லாருக்கும் அன்னையை போற்றிஅவள் திருவடி சரணமென்று இம்மதுரையில் வாழ்வோர்க்கு இனிப்பிறவியும் வாய்க்கப்பெறுமோ? யோகம், உபாசனா சித்திக்கப்பெற சத்குரு ஸ்ரீ பதஞ்ஜலி மஹரிஷியின் ஜீவ திருஷ்டி நம் அனைவருக்கும் அருள்பாலிப்பதாகுக.

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 15. அன்னை மீனாக்ஷி சக்தி வடிவினள் »
பிரபஞ்சத்திற்கு அன்னையும் பிதாவுமாக இருப்பவர்கள் சக்தியும் சிவமும் ஆகும். நமது உடலைச் சூத்திர ... மேலும்
 

உடலில் ஆதார இடங்கள் செப்டம்பர் 14,2018

மூலாதாரம் என்பது கருவாயில் - எருவாயிற்கு இடையே அமைந்துள்ளதுஇது பிருத்வி என்று பூமியின் அம்சமாய் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar