தென்காசி:தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் இன்று (3ம் தேதி) பொது விருந்து நடக்கிறது.தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோயிலில் அண்ணாதுரை நினைவு நாளை முன்னிட்டு இன்று (3ம் தேதி) பொது விருந்து நடக்கிறது. கோயில் வளாகத்தில் மதியம் விருந்து அளிக்கப்படுகிறது. அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.ஏற்பாடுகளை கோயில் தக்கார் கவிதா பிரியதர்ஷினி, நிர்வாக அலுவலர் கணபதி முருகன் செய்துள்ளனர். குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் இன்று (3ம் தேதி) காலை 11.30 மணிக்கு அண்ணாத்துரை நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடும், பொதுவிருந்தும் நடக்கிறது.