பதிவு செய்த நாள்
03
பிப்
2012
11:02
வீரவநல்லூர்:வெள்ளங்குளி கோயிலில் வரும் 9ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.வெள்ளங்குளி ஹரிஹரபுத்திர இடைமலை சாஸ்தா கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும் 9ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் வரும் 7ம் தேதி துவங்குகிறது. அன்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், தனபூஜை, புனிதநீர் எடுத்து வருதல், முதல் காலயாக சாலை பூஜை நடக்கிறது. வரும் 8ம் தேதி காலை 2வது கால யாகசாலை பூஜை, மாலை 3வது கால யாகசாலை பூஜை, மருந்து சாத்துதல் நடக்கிறது. கும்பாபிஷேக நாளான 9ம் தேதி காலை 4வது கால யாகசாலை பூஜை, 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஹரிஹரபுத்திர இடைமலை மேகலிங்க சாஸ்தா மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மகா அபிஷேகமும், மதியம் அன்னதானமும் நடக்கிறது.ஏற்பாடுகளை தலைவர் ஆறுமுகம், செயலாளர் சரவணன், பொருளாளர் சேதுராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.