பதிவு செய்த நாள்
18
செப்
2018
03:09
ஓசூர்: தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, மதகொண்டப்பள்ளி, ராயக்கோட்டை பகுதி யில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த, 82 விநாயகர் சிலைகள், 530 போலீசார் பாதுகாப்புடன், நேற்று (செப்., 17ல்)கரைக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, மதகொண்டப்பள்ளி, ராயக் கோட்டை, தளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடந்த, 13ல், 363 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் பூஜைகள் செய்யப்பட்டன. மூன்றாம் நாளில் இருந்து, விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன.
ஐந்தாம் நாளான, நேற்று, (செப்., 17ல்) மதகொண்டப்பள்ளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த, 82 விநாயகர் சிலைகளை கரைக்க, இந்து அமைப்பினர், மக்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர். நகரின் முக்கிய வீதிக ளில், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று, நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. 530 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.