பதிவு செய்த நாள்
18
செப்
2018
03:09
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், பவானி ஆற்றில் நேற்றிரவு (செப்., 17ல்) கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, புன்செய்புளியம்பட்டி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், இந்து முன்னணி சார்பில், 40 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, சிலை கரைப்பு ஊர்வலம், நேற்று (செப்., 17ல்) நடந்தது.
அவிநாசி சாலை, டாணாபுதூருக்கு அனைத்து சிலைகளும் வாகனங்களில் கொண்டு வரப்பட்டன. மாலை, 5:30 மணியளவில், முத்துமாரியம்மன் கோவில் முன், துவங்கிய ஊர்வலம், சத்தி சாலை, பஸ் ஸ்டாண்ட், மாதம்பாளையம் சாலை, பவானிசாகர் சாலை, ஆதிபராசக்தி அம்மன் கோவில் வீதி, உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பவானிசாகர் அடுத்த, பகுடுத்துறை- பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன.
* பவானி, அம்மாபேட்டை, வெள்ளித்திருப்பூர், புரவிபாளையம், சுந்தராம்பாளையம், கணபதி நகர், கருங்கரட்டூர், குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், இந்து முன்னணி சார்பில், 14 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை நடந்தது. இந்த சிலைகள், நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. முன்னதாக பூதப்பாடி நால்ரோடு கொண்டு வரப்பட்டது. இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் சிவசக்திவேல், மாநில பேச்சாளர் பிரபாகர் துவக்கி வைத்தனர். ஊமாரெட்டியூர் பிரிவு காவிரி ஆற்றில், சிலைகள் கரைக்கப்பட்டன.