பதிவு செய்த நாள்
04
பிப்
2012
10:02
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன்கோயில் யானைகள் இயற்கை சூழலில் இருப்பதற்காக, புல்தரை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இக்கோயிலைச்சேர்ந்த தெய்வானை,14 மற்றும் குமரன்,10, ஆகிய இருயானைகள், முதுமலை புத்துணர்வு முகாமிற்கு சென்று திரும்பின. யானைகள் இயற்கை சூழலில் இருக்கவேண்டுமென, முகாமில் டாக்டர்கள் வலியுறுத்தினராம். இதற்காக, இங்குள்ள யானைமண்டபத்தின் பின்பகுதி நிலத்தில், தனியார் சார்பில் புல்தரை அமைக்கும் பணி நேற்று துவங்கப்பட்டு, புல் நடப்பட்டது. தக்கார் கோட்டைமணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், அதிகாரிகள் கலந்து கொண்டனர். விரைவில், இப்பணி முடிக்கப்படும்.