பதிவு செய்த நாள்
04
பிப்
2012
11:02
தர்மபுரி: ராமியனஅள்ளி ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதிரவுபதியம்மன், ஸ்ரீபோத்துராஜா ஸ்வாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம் வரும் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, பிப்.,5 மாலை 3 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மாலை 6 மணி முதல் விநாயகர் பூஜை, யஜமான சங்கல்பம், புண்யாகம், வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரஹணம், அங்குரம், கும்பு அலங்காரம், முதற்கால யாக பூஜைகள், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், இரவு அஷ்டபந்தனம் நடக்கிறது.
வரும் 6ம் தேதி காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளும், நாடி சந்தானம், மஹா பூர்ணாஹுதியும், காலை 9 மணிக்கு மேல் மீன லக்னத்தில் ஸ்ரீமஹா கணபதி, ஸ்ரீதிரவுபதியம்மன், ஸ்ரீபோத்துராஜா ஸ்வாமிக்கும், கோபுரங்களுக்கும் புனருத்தான மஹா கும்பாபிஷேகமும், மஹா அபிஷேகம், தீபாராதனை, கோபுர தரிசனம் நடக்கிறது.
இதையொட்டி காலை 11 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 5ம் தேதி இரவு 10 மணிக்கு ஊத்தங்கரை ஸ்ரீகலைமகள் நாடக சபா முருகன் குழுவினரின் "பதினெட்டாம் போர் நாடகம் நடக்கிறது.