பதிவு செய்த நாள்
04
பிப்
2012
11:02
மோகனூர்: கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில், லட்சுமி ஹயக்ரீவர் லட்சார்ச்சனை பெருவிழா, பிப்ரவரி 15ம் தேதி, கோலாகலமாக துவங்குகிறது.
மோகனூர் காவிரி ஆற்றின் கரையில், பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஸ்வாமி பத்மாவதி தாயாருடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும், சக்கரத்தாழ்வார் சிறப்பு வழிபாட்டு ஸ்தலமாகும் விளங்குகிறது. இக்கோவிலில், ஆண்டுதோறும் லட்சுமி ஹயக்ரீவர் லட்சார்ச்சனை பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டு விழா, பிப்ரவரி 15ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை நடக்கிறது. மாணவ, மாணவியர் கல்வியில் வெற்றி பெறவும், தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி பெறவும், நாட்டில் யாவும் வளம்பெறவும், இயற்கை சீற்றங்கள் தனியவேண்டியும், பருவமழை காலத்தே பொழிந்து நதிநீர் வளம் பெற்று விவசாயம் மேன்மையடைவும், உலக நன்மைக்காவும் இந்த லட்சார்ச்சனை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, பிப்ரவரி 15ம் தேதி காலை 6 மணிக்கு விஸ்வக்ஷேந பூஜையும் நிகழ்ச்சி துவங்குகிறது. பிப்ரவரி 18 வரை தினமும் காலை 8 மணிக்கு அபிஷேகம், லட்சார்ச்சனை, மேதா ஹயக்ரீவ சர்வ வித்யா ப்ராப்த மஹாமந்த்ர யாக்ஞம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை லட்சார்ச்சனை, இரவு 8.30 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்ரவரி 19ம் தேதி காலை 7 மணிக்கு, புன்யாகவாசனம், ஹோமசங்கல்பம், லட்சார்ச்சனை நிறைவு, பூர்ணாகுதி, ஹயக்ரீவர் சிறப்பு திருமஞ்சனம், பிரசாதம் வழங்குதல், அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஹயக்ரீவ உற்சவமூர்த்தி கோவில் வளாகத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருச்சுற்று எழுந்தருல், புஷ்பாஞ்சலி, கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் வரதராஜன், செயல் அலுவலர் சுதாகர் மற்றும் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.