எப்போதும் சிவதியானத்தில் ஆழ்ந்திருக்கும் இவர் சிவன் சந்நிதி பிரகாரத்தில் வீற்றிருப்பார். சிவனடியார்களில் ஒருவரான இவருக்கு‘ஈஸ்வரர்’ பட்டம் உண்டு. நிர்மால்ய தீர்த்தம் (சிவனுக்கு அபிஷேகம் செய்த நீர்) கொட்டும் கோமுகி அருகில் இவருக்கு சந்நிதி அமைப்பர். இந்த கோமுகியைத் தாண்டக்கூடாது என்பதால் சண்டிகேஸ்வரரை வலம் வந்து வணங்குவதில்லை.