நத்தம்: நத்தம் அருகே மூங்கில்பட்டியில் வீரன் பட்டாணி சுவாமி கோயில் விழாவை முன்னிட்டு புரவி எடுப்பு நடந்தது. இதற்காக ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே சிலைகள் தயாரிக்கும் பணி நடந்தது. கண்மாய் கரையில் வழிபாடு செய்து குதிரை, நாய் உள்ளிட்ட பல்வேறு வகை விலங்குகளின் சிலைகள் ஊர் மந்தையில் உள்ள முத்தாலம்மன் கோயில் அருகே அணிவகுத்து நிறுத்தப்பட்டன. சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தேங்காய், பழங்கள் வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து வாணவேடிக்கையுடன் சிலைகள் ஊர் அருகே பெருமாள்மலை அடிவாரம் எடுத்துச் செல்லப்பட்டது. மாலையில் பொங்கல் வைத்து அபிேஷக ஆராதனை நடந்தது. திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.