திருப்பரங்குன்றத்தில் ‘ரோப் கார்’ கனவு எப்போது நிறைவேறும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2018 10:09
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைக்கு ‘ரோப்கார்’ வசதி ஏற்படுத்த வேண்டும் என நீண்டகாலமாக பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மலைமேல் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. அங்கு வற்றாத சுனை உள்ளது. நக்கீரருக்கு விமோசனம் கொடுப்பதற்காக முருகப்பெருமான் வேல் மூலம் பாறையை கீறி கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது. அதனை நினைவுகூறும் வகையில் வேல் மலைமீது கொண்டு செல்லப்பட்டு சுனை தீர்த்தத்தில் அபிஷேகம் நடக்கிறது. இம்மலை மேல் சென்றவர 3 மணி நேரம் ஆகும். பலரால் மலைமேல் செல்ல முடியவில்லை. இதற்காக ‘ரோப்கார்’ அமைக்க 2011ல் ஆய்வு நடந்தது. சரவணப் பொய்கை புதிய படிக்கட்டுகள் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டதோடு திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ‘ரோப்கார்’ அமைக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் காத்திருக்கின்றனர். அவர்களது கனவை இடைத்தேர்தலில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ., நிறைவேற்றுவாரா.