புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சிங்கனூர் லட்சுமி நாரணூயண சீனிவாசப்பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு, சுவாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாசபெருமாள், சித்தாபுதுார் ஜெகன்நாதபெருமாள், உக்கடம் லட்சுமிநரசிம்மர், பெரியகடைவீதி லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி, சலிவன்வீதி வேணுகோபாலசுவாமி, கோட்டைமேட்டிலுள்ள கரிவரதராஜ பெருமாள். பேரூர் பச்சாபாளையத்திலுள்ள தசாவதாரபெருமாள், கோவைப்புதூரிலுள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.