தேவாரம்: "கன்னிமார் கோயில் சுவாமி கும்பிடு அறிவிச்சுட்டாங்க. கண்டிப்பாக மழையிருக் கும், என தேவாரம் பகுதி மக்கள் ஆன்மிக நம்பிக்கை வைத்துள்ளனர்.
அதுபொய்த்து போகாமல் கடந்த 450 ஆண்டுகளாக மழைநீரை எடுத்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு மேற்கொள்ளும் பழமையான கோயில், தேவாரம் சாக்குலூத்து மலையடி வாரத்தில் உள்ளது. எவ்வளவு வறட்சியான காலத்திலும் சுவாமி கும்பிடு சாட்டிய சில நாட்களில் கனமழை பெய்து வெள்ளப்பாறை ஊற்றுநீர் அருவியாக கொட்டுகிறது.
அன்னதானம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் இந்த ஊற்று நீரை பயன்படுத் துகின்றனர்.கடந்த 450 ஆண்டுகளுக்கு முன் பண்ணப்புரத்தை சேர்ந்த சங்கப்பன் நிலத்தை உழவு செய்த போது, கன்னிமார் சிற்பம் செதுக்கப்பட்ட கல் ஏரில் தட்டியது. இதை வெளியே எடுத்து டி.மீனாட்சிபுரம் அருகேயுள்ள வெள்ளப்பாறையின் கீழ்பகுதியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
அதன்பின் அவர் வாழ்வு வளம் பெற்றதால் 7 கன்னிமார்களை சிறப்பிக்கும் விதமாக மழைநீர் தேக்குவதற்கு, அப்பகுதியில் 7 கண்மாய்களை நிர்மாணித்தார். அவரது வாரிசுகள் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத திங்களன்று விழாவாக கொண்டாடுகின்றனர்.
பூஜாரி ஆர்.ஞானசேகரன் கூறுகையில், ""வாரிசு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம், குடும்பத்தில் ஏற்படும் தீராத பிரச்னைகள் நீங்கு இங்கு வந்து வேண்டுகின்றனர்.
அவர்களின் விருப்பம் நிறைவேறுவதால் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமா னோர் மீண்டும் தரிசனம் செய்ய வருகின்றனர்.சங்கப்பரின் சிறப்பு அறிந்த திருவாங்கூர் சமஸ்தானம் 18 ஏக்கர் ஏலத்தோட்டம் வழங்கியது.
அங்கு நடைபெறும் விழாக்களில் சங்கப்பர் வாரிசுகளுக்கு அழைப்பு வரும். தேவாரம் பகுதியில் கடந்த 1988ல் கனமழை பெய்த போது, வனப்பகுதியிலிருந்து ஏராளமான பாறைகள் உருண்டு விழுந்தன. அவற்றில் ஒன்று கூட கோயில் வளாகத்திற்குள் விழவில்லை. என்றார் மேலும் விபரங்களுக்கு 92457 76961