பதிவு செய்த நாள்
06
அக்
2018
02:10
பழநி: ஆண்டவன் சன்னிதானம் செல்லும் எல்லோரும் அமைதி வாழ்வு வேண்டும் என்பதை விட, வீடு, வாசல், கார், பங்களா என்று கேட்டுத்தான் இறைவனை தொல்லை பண்ணு கின்றனர்.
இதற்கு காரணம் உள்ளது. நடுத்தர, ஏழை எளியோர் பலருக்கும், விலைவாசியை பார்த்தால் வீடு என்பதெல்லாம் கனவாகவே உள்ளது. கையில் காசு இருந்தால்கூட பலருக்கு வீடு அமையும் சூழ்நிலை உடனே கிடைத்து விடும் என்று சொல்வதற்கில்லை. இதனால் கனவு நனவாகுமா என்றே கலக்கத்துடனே காலத்தை கழிப்பார்.
அவ்விதமானோர் பழநியில் வினோதமான வழிபாட்டை கடைபிடித்தால், வீடுகட்டி வசிக் கலாம் என நம்புகின்றனர். ஆமாங்க... கோயிலுக்கு வரும் பக்தர்கள், அடையாளமாக கற்களை எடுத்து கீழே விழாமல் அடுக்கி வைத்தால் போதும்ங்க... உங்க வீடுகட்டும் ஆசை நிறைவேறும்முங்க... என்கின்றனர்!
பழநி மலைக்கோயிலிலுக்கு வரும் பக்தர்கள் பல ஆண்டுகளாக இதை ஒரு வேண்டுதலாகவே செய்கின்றனர்.. யானைப்பாதை, படிப்பாதை வழியாக மலையேறும் பக்தர்கள் ஏற்கனவே குழந்தைவரம் வேண்டி மரங்களில் துணியில் கல்லை வைத்து கட்டியுள்ளனர்.
அவ்விடத்தின் கீழே வீடுகட்டும் கனவு பலிக்க வேண்டும் என்பதற்காக, சிறிய கற்களை ஒன்றின் மீது ஒன்றாக வரிசையாக அடுக்கி வைத்து, சீக்கிரம் வீடுகட்ட வேண்டும் என இறைவனை நினைத்து துதிக்கின்றனர்.
மதுரை பக்தர்கள் ஆதிலட்சுமி, ஜான்சிராணி கூறியதாவது: குழந்தைவரம் வேண்டி மரத்தில் துணியில் தொட்டில் கட்டுவதைப் போல, சொந்த வீடு வேண்டும் என்ற ஆசையில் இதுமாதிரியான வேண்டுதலை செய்கிறோம்.
கற்களை அடுக்கிவைக்கும் போதே, இதோ, இன்றே நமது கனவு பலித்து விட்டது என்பதைப் போல மனநிறைவு கிடைக்கிறது, என்றனர். அப்புறம் என்னங்க நீங்களும் வீடுகட்ட அஸ்திவாரம் போட வேண்டுமா? அப்படியே பழநி கோயிலுக்கு வரும்போது, கல்லை அடுக்கி கடவுள், கடவுள் நம்பிக்கையை காட்டுங்க.. அடுத்த ஆண்டு வீடு ரெடி...