Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெற்றோர் உடல்நலம் காக்க.... விலங்கு முகத்தோடு இறைவனின் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2012
04:02

*  உள்ளத்திற்கு மகிழ்ச்சி அளிப்பதில் பிரார்த்தனைக்கு இணையாக வேறு எதுவும் இல்லை. மனிதனை உயர்த்தும் தன்மை அதற்கு உண்டு.கூட்டுப்பிரார்த்தனையால் விரைவில் பலன் கிடைக்கும்.
* நாம் அனைவரும் சகோதரர்கள். கடவுளே நம் தந்தை. இதை ஒப்புக்கொள்வோர், எங்கு சென்றாலும் அவரை
மக்கள் பின்பற்றி செல்வர்.
* பிரார்த்தனை செய்பவர்களுக்கு ஸ்லோகம் தெரியாமல் இருக்கலாம். வடமொழியோ, பாடல்களோ தெரியாமல் இருக்கலாம். ஆனால், ராம நாமம் அனைவருக்கும் சொந்தமானது. இதை எல்லாரும் எளிமையாக சொல்லலாம். பல்லாண்டுகளாக வாழையடி வாழையாக வந்த சொத்தாகும்.
* தினமும் மாலையில் ஒன்று கூடி பக்திப்பாடல்கள், கீதையிலிருந்து சில ஸ்லோகங்கள் ஜெபித்து வந்தால், மனத்தூய்மையும், நிம்மதியும் உண்டாகும்.
* பிரார்த்தனையில் யாருடைய வற்புறுத்தலுக்காகவும் ஈடுபடுவது கூடாது. மனப்பூர்வமாக ஈடுபட்டால் மட்டுமே பலன் ஏற்படும்.
* பிறரைத் தீயவராக எண்ணக் கூடாது. பிறர் நம்மைத் தீயவராக எண்ணுவதாகச்
சந்தேகப்படுவதும் கூடாது. இங்கு எல்லோரும் நல்லவரே. நல்லவர்களின் லட்சியம் தோற்றதாக சரித்திரம் இல்லை.
* ஆரோக்கியம் உள்ள ஒவ்வொருவரும் உணவைச் சம்பாதிப்பதற்கு வேண்டிய அளவுக்கு ஏதாவது வேலை செய்வது அவசியம்.
* ஒவ்வொருவரும் தன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துப் பிழைத்தால் இம்மண்ணுலகம் விண்ணுலகமாக மாறிவிடும்.
* நல்லவர்களோடு ஒத்துழைப்பது எப்படி நம் கடமையோ, அப்படியே தீயவர்களோடு ஒத்துழைப்பு தராமல் இருப்பதும் நம் கடமையாகும்.
* பணத்தைவிட அறிவு உயர்ந்தது. அறிவைவிட ஒழுக்கமே உயர்ந்தது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
* ஆசிரியர்கள் ஒழுக்கத்தைப் பாடப்புத்தகத்திலிருந்து கற்றுக் கொடுக்க முடியாது. தங்களுடைய நடவடிக்கைகளிலிருந்து தான் கற்றுக் கொள்ள முடியும்.
* பக்தனுக்கு எந்தவிதமான துன்பம் ஏற்பட்டாலும் உடனே வந்து உதவி செய்ய கடவுள் ஒருநாளும் தவறுவதே இல்லை. இதற்கு தேவை கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை.
* கடவுள் நாம் செய்யும் நன்மை தீமைகளுக்குச் சரியான கணக்கு வைத்திருக்கிறார். அவருக்கு இணையான கணக்குப் பிள்ளை உலகில் கிடையாது.
* பிறருக்குத் தவறாகத் தோன்றினாலும் தனக்குச் சரியாகத் தோன்றுவதைச் செய்வதே கடமையை நிறைவேற்றுவதற்கான சரியான வழி.
*  கடவுள் என்னும் சக்தி வர்ணனைக்குள் அடங்காத ஒன்றாகும். மனிதன் வர்ணிக்க வேண்டிய அவசியமும் அதற்குக் கிடையாது.
* குழந்தைகள் கையை உபயோகிக்கும் முன்பு, கண்ணையும் காதையும் நாவையும் உபயோகிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
* நாம் கடவுளுடைய நாமத்தை முழு மனதுடன் பூஜித்தால் நம்மிடம் உள்ள ஆசை, பொய்முதலிய சகல துர்குணங்களும் தாமாகவே அகன்று விடும்.

-சொல்கிறார் மகாத்மா.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
பெங்களூரு குமாரசாமி லே -அவுட்டில் உள்ளது ஸ்ரீ 108 கணேசா கோவில். பெயருக்கு ஏற்றாற் போல, 108 கணேச ... மேலும்
 
temple news
பெங்களூரு கோரமங்களாவில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில். இவரை ‛டெக்கி கணேசா’ எனவும் அழைக்கின்றனர். ... மேலும்
 
temple news
பெங்களூரு கஸ்தூரிபா சாலையில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில், ‛டிராபிக் கணேசா’ கோவில் என கூறினால் ... மேலும்
 
temple news
பெங்களூரு ஜெய நகரில் உள்ளது ஸ்ரீ சக்தி கணேசா கோவில். பழமையான கோவில்களின் ஒன்றாகும். வேலைவாய்ப்புகள் ... மேலும்
 
temple news
பெங்களூரு கே.ஆர்., புரத்தில் உள்ளது ஸ்ரீ கட்டே கணேசா கோவில். மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar