அருப்புக்கோட்டை பெருமாள் கோயில் அருகே டாஸ்மாக்; பெண் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2018 02:10
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை பெருமாள் கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் குடிமகன்கள் போதையில் தரும் தொல்லையால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை தெற்கு தெரு, பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் வளைவில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த ரோட்டில் பள்ளிகள், மருத்துவமனைகள், வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. கோயிலுக்கு அருகே வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. சுவாமியை தரிசிக்க பக்தர்கள் காலை, மாலையில் அதிகளவு வருகின்றனர். கோயில் அருகில் டாஸ்மாக் கடை இருப்பதால், குடிமகன்கள் கூட்டம் எப்போதும் அலை மோதுகிறது. போதையில் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் தகராறு செய்கின்றனர். பெண்கள் கோயிலுக்கு வர அச்சமடைகின்றனர்.
தாராள விற்பனைடாஸ்மாக் யினை கடந்து தான் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டியுள்ளது. இரவில் பஸ் ஸ்டாண்டிற்கு தனியாக செல்ல பெண்கள் பயப்படுகின்றனர். இரவு 10:00 மணிக்கு மேல், கடையை மூடி விட்டு, பின்பக்கம் வழியாக விற்பனை தராளமாக நடக்கிறது. பொதுமக்களுக்கு தொந்தரவாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரியுள்ளனர்.