ராஜபாளையம்:ராஜபாளையம் அம்பலப்புளி பஜார் கருப்பஞானியார் சுவாமி சமாது கோயிலில் ஜீவ ஐக்கிய சமாது புரட்டாசி குருபூஜை விழா நடந்தது. கோயில் தலைவர் வைத்தீஸ்வரன் தலைமையேற்றார். தர்மகர்த்தா மாணிக்கம் முன்னிலை வகித்தார். கருப்பஞானியார் மற்றும் பொன்னப்பஞானியார் சுவாமிகளுக்கு சிறப்பு முப்பழ பூஜையுடன் விழா துவங்கியது.
விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஆஞ்சநேயர், பிரம்மா உள்ளிட்ட ெதய்வங்க ளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டன.
கருப்பஞானியார் மற்றும் பொன்னப்பஞானியார் சுவாமிகளுக்கு பல்வேறு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடத்தப் பட்டது. 6 ஆயிரம் பூக்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு வழி பாடு நடத்தப் பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை துணை தர்மகர்த்தா பழனிச்சாமி, ஞானகுரு, விநாயக மூர்த்தி, கணேசன் செய்திருந்தனர்.