உத்திரமேரூர்: உத்திரமேரூர் வரதராஜபெருமாள் கோவில் மற்றும் திருமுக்கூடல் ஆற்றங் கரையில், மகாளய அமாவாசையை ஒட்டி, தங்கள் முன்னோருக்கு நேற்று (அக்.,8ல்) , இந்துக்கள் திதி கொடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.உத்திரமேரூர், வெங்கடேச பெருமாள் கோவில் மற்றும் பால சுப்பிரமணியம் கோவிலுக்கு சொந்தமான குளக்கரையில், திதி கொடுத்தனர். உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமுக்கூடலில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில், மக்கள் திதி கொடுத்து, பாலாற்றில் புனித நீராடினர்.