பதிவு செய்த நாள்
09
அக்
2018
01:10
கரூர்:மஹாளய அமாவாசையை முன்னிட்டு, கரூர் காவிரி ஆற்றங்கரையில், மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து, ஏராள மானோர் வழிபட்டனர்.கரூர் அருகேயுள்ள, நெரூர் காவிரி ஆற்றங்கரையில், புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையன்று, மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க, ஏராளமானோர் வருவர்.அதன்படி, மஹாளய அமாவாசை யான (அக்.,8ல்) நேற்று, நெரூர் காவிரி ஆற்றங்கரையில், காலை, 5:00 மணி முதல், கரூர், அரவக் குறிச்சி, பரமத்தி, சின்னதாராபுரம், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, ஏராளமானோர், குடும்பத்துடன் வந்து, காவிரி ஆற்றில் நீராடி, வழிபட்ட பொருட்களை ஆற்றில் விட்டு, மறைந்த முன்னோர்களை நினைத்து வழிபட்டனர்.