ஆத்தூர்:மஹாளய அமாவாசையை முன்னிட்டு, ஆத்தூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில் களில் சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர், கோட்டை சம்போடை வனத்தில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. நேற்று (அக்.,8ல்), மஹாளய அமாவசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. மூலவர் அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பெண்கள் பூஜைகள் நடத்தி வழிபட்டனர். அதேபோல், கடைவீதி அங்காளபரமேஸ்வரி, பெரியமாரியம்மன், ஆறகளூர் அம்பாயிரம்மன் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.