திருப்பதி பிரம்மோற்ஸவத்திற்கு பழநியில் இருந்து பூக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2018 03:10
பழநி: திருப்பதி நவராத்திரி பிரம்மோற்ஸவ விழாவிற்கு பழநியில் இருந்து 8 குவிண்டால் அளவுக்கு பூக்கள் அனுப்பப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் பழநி புஷ்ப கைங்கர்யா சபா மூலம் திருப்பதி புரட்டாசி பிரம்மோற் ஸவ விழாக்களுக்கு பூக்கள் அனுப்புகின்றனர். கடந்த மாதம் நடந்த புரட்டாசி பிரம்மோற்ஸ வத்திற்கு செப். 11ல் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சேகரிப்பட்ட பூக்கள் அனுப்பப்பட்டன.
நவராத்திரி பிரம்மோற்ஸவத்திற்காக இரண்டாம் கட்டமாக நேற்று (அக்., 8ல்)பழநி மாரியம் மன் கோயிலில் இருந்து திண்டுக்கல் வழியாக திருப்பதிக்கு பூக்கள் அனுப்பிவைக்கப் பட்டது.
இந்நிகழ்ச்சியில் கந்தவிலாஸ் சரவணப்பொய்கை பாஸ்கரன், கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் சபா நிர்வாகிகள் பங்கேற்றனர்.சபா நிர்வாகி மருதசாமி கூறுகையில், "அக்.9 முதல் 18 வரை நவராத்திரி பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இதற்காக வாடாமல்லி, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களை அனுப்பி வைக்கிறோம். திருப்பதிக்கு பூக்கள் அனுப்ப விரும்புவோர் 94434 03026 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.