பதிவு செய்த நாள்
09
அக்
2018
03:10
பவானி: ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இருந்து, தாமிரபரணி மஹா புஷ்கரம் குறித்த விழிப்புணர்வு ரத யாத்திரை நேற்று (அக்.,8ல்) புறப்பட்டுச் சென்றது.
தாமிரபரணி நதி துவங்கும் பாபநாசம் முதல், கடலில் சங்கமிக்கும் புன்னைகாயல் வரை, 149 படித்துறைகளிலும், பக்தர்கள், பொதுமக்கள் புனித நீராடும் வகையில், தாமிரபரணி மஹா புஷ்கர விழாவை விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்துகிறது. நேற்று காலை, 7:00 மணிக்கு பவானி சங்கமேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்னால், மகர ராசிக்கு உரிய, துங்கபத்ரா தேவியின் புனித ரதம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
பவானியில் இருந்து புறப்பட்ட ரத யாத்திரை, சங்ககிரி, நாமக்கல் வழியாக பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, வரும், 11ல் மதுரைக்கு சென்றடையஉள்ளது.
நேற்று (அக்., 8ல்) காலை, 10:30 மணிக்கு ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் முன் வந்து நின்றது.ரதத்தில், துங்கபத்ரா தேவி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய வைக்கப்பட்டிருந்தது.
கலசங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.இதேபோல, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் முன்பிருந்து நேற்று (அக்.,8ல்) கிளம்பிய ரத யாத்திரையை, பா.ஜ., மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் துவக்கி வைத்தார்.