தீப்பாய்ச்சி மாரியம்மன் கோயிலில் இன்று பறவைக்காவடி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2012 03:02
செங்கோட்டை :செங்கோட்டை பார்டரில் பிரசித்தி பெற்று விளங்கும் தீப்பாய்ச்சி மாரியம்மன் கோயிலில் பறவைக்காவடி இன்று (7ம் தேதி) மாலை நடக்கிறது. செங்கோட்டை பிரானூர் பார்டரில் பிரசித்தி பெற்று விளங்கும் தீப்பாய்ச்சி மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 29ம் தேதி கொடைவிழா துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், விசேஷ அலங்காரங்கள் மண்டப்படிதாரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொடைவிழாவில் சிறப்பு பெற்ற பறவைக்காவடி இன்று (7ம் தேதி) மாலை 6 மணிக்கு நடக்கிறது. தீச்சட்டி ஊர்வலம், பறவைக்காவடி, காளிவேஷம் போன்றவை இடம்பெறுகின்றன.