பதிவு செய்த நாள்
07
பிப்
2012
03:02
ஆழ்வார்குறிச்சி :ரவணசமுத்திரத்தில் நேற்று தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. ரவணசமுத்திரத்தில் கடந்த 29ம் தேதி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் வேதபாராயணம், சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சிகளாக 5ம் திருநாள் சிங்கப்பூர் ரவியின் பகவத்கீதையின் மகிமை பற்றிய உபன்யாசம் நடந்தது. இரு நாட்கள் ஓ.கே.சி.வெங்கடேசனின் கிளாரினெட் கச்சேரியும், திரைப்பட இசையமைப்பாளர் பரத்வாஜ்-ன் மனைவி ஜெயஸ்ரீ, ராஜேஷ்வரி ஆகியோரின் சிறப்பு கச்சேரியும் நடந்தது. நேற்று காலை சொக்கலிங்கநாதர்-மீனாட்சியம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளினர். பின்னர் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. தேர் திருவிழாவில் ரவணசமுத்திரம் ஆர்.வி.எஸ்.நலக்கமிட்டி தலைவர் நீலகண்டன், கவுன்சிலர் கணேசன், பஞ்., தலைவர் புகாரி மீராசாகிப், முன்னாள் கவுன்சிலர் புவனேஸ்வரி, முன்னாள் பஞ்., தலைவர் முகமது உசேன், கோயில் கணக்கர் பொன்னுபிள்ளை, எழுத்தர் மாணிக்கம், ராகவேந்திரராவ் உட்பட ஆர்விஎஸ் நலக்கமிட்டியினர், கட்டளைதாரர்கள், பொதுமக்கள், இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைகளை கிருஷ்ணபட்டர் நடத்தினார். இன்று (7ம் தேதி) மகா ருத்ர ஹோமமும், வேதபாராயணமும், தைப்பூச தீர்த்தவாரியும் நடக்கிறது. ரவணசமுத்திரம் தேர் திருவிழா மதநல்லிணக்க திருவிழாவாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் முருகன் மேற்பார்வையில் ஆர்விஎஸ் நலக்கமிட்டியினர், கட்டளைதாரர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.