பதிவு செய்த நாள்
13
அக்
2018
12:10
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் ஆண்டுதோறும் புதுமையான விதத்தில், நவராத் திரி கொலு அமைக்கும் ஒருவர், இந்த ஆண்டும் பிரம்மாண்டமான கொலு வைத்துள்ளார்.
திருக்கழுக்குன்றம், பெரிய தெருவில் உள்ள பரமானந்தம் பார்வதி என்பவர், தன் இல்லத்தில், 28 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும், புதுமையான முறையிலும், பிரமாண்டமாகவும் கொலு வைத்து வழிபட்டு வருகிறார்.
வேலூர் தங்கக்கோவில், மாடம்பாக்கம் சித்தர் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், அமெரி க்கா நியூ ஜெர்ஸி என்ற இடத்தில், 125 ஏக்கரில், 100 கோடி ரூபாய் செலவில் திறக்கப்பட்ட பாலாஜி கோவில் போன்றவற்றை, கொலுவாக வடித்திருந்தார்.
இந்தாண்டு, கோவையில் உள்ள, தியான லிங்கம் வடிவிலான சிலையை, 5 அடி உயரத்தில், அமைத்துள்ளார். மேலும், ஒன்பது படிக்கட்டுகளுடன் கொலு அமைத்து, அம்மனுக்கு வெவ் வேறு அலங்காரம் செய்துள்ளார்.இதை காண, திருக்கழுக்குன்றம் பகுதி மக்கள், ஏராளமாக வந்து செல்கின்றனர்.