Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பட்டிவீரன்பட்டி 10 கிராம ... நாமக்கல் இந்து அமைப்புகள் கண்டன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்தியமங்கலத்தில் ஆண்கள் மட்டுமே வழிபடும் மல்லிகார்ஜூன கோவில்: பெண்களுக்கு 100 சதவீதம் தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2018
03:10

சத்தியமங்கலம்: ஆண்கள் மட்டுமே வழிபடும் கோவிலில், பிறந்த பெண் குழந்தை முதல், வயதான பெண்கள் வரை, அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டு, நூற்றாண்டு காலமாக, வழிபாடு நடக்கிறது.

தமிழகம்-கர்நாடகா, மாநில எல்லையான, ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்து, கொங் ஹள்ளி வனம் உள்ளது. இங்கு மூன்று மலைகளுக்கு நடுவில், பாறை குகையில், மல்லிகார் ஜூன சுவாமி கோவில் அமைந்துள்ளது. லிங்காயத்து பழங்குடியின இன மக்களுக்கு, சொந்தமான கோவிலில், பாறை குகையில் சுயம்புவாக லிங்கம் நிலை கொண்டுள்ளது. பல நூறு ஆண்டுகளாக, லிங்கதுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுகின்றனர்.

இங்கு, 18 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சார்பில், ஆண்டுதோறும் குண்டம் விழா, விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கோவிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது  என்பது ஐதீகம். இதனால் பெண்கள் அனைவரும், 2 கி.மீ., தூரத்தில் நின்று விடுவர். குண்டம் விழாவிலும் ஒரு சிறப்புண்டு. அதாவது தீ வார்க்கப்பட்டு, குண்டத்தில் மலர்கள் தூவப்படும்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ்ந்து ஆராவாரம் செய்ய, பூசாரி மட்டுமே இறங்குவார். இதிலும், பூசாரியை தவிர, பக்தர்கள் தீ மிதிக்க கூடாது என்பது, ஐதீகமாக உள்ளது. இதனால்
குண்டத்தை, ஆண்கள் தொட்டு வணங்கி செல்வர். சபரிமலை அய்யப்பன் கோவிலில் கூட, வயதான பெண்கள் வழிபட அனுமதியுண்டு. ஆனால், இங்கு, பெண் குழந்தை முதல், வயதான
பெண்கள் வரை, யாருமே செல்லக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar