Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நாமக்கல் இந்து அமைப்புகள் கண்டன ... திருமலையில் நாளை (அக்.,14ல்) கருடசேவை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செங்கோடு தெப்பக்குளம் புதுப்பிக்கும் பணியில் தொய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2018
03:10

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், பழமை பெருமை வாய்ந்த தெப்பக்குளத்தின் சீரமைப்பு பணிகள் தொய்வு நிலையில் உள்ளன. திருச்செங்கோடு - ஆனங்கூர் சாலையில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த, நகராட்சிக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது.

சுற்றுவட்டார மக்களின் குடிநீர் தேவை இதன் மூலம் பூர்த்தி செய்யப்பட்டது. வைகாசி விசாக தேரோட்ட திருவிழாவில், அர்த்தநாரீஸ்வரர் தெப்ப உற்சவம், பெரிய மாரியம்மன் கோவில்
கம்பம் விடுதல், சின்ன ஓங்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பூமிதிக்கும் பக்தர்கள் தெப்பக்குளத்தில் நீராடிய பின்னர் தான் குண்டம் இறங்குவர்.

குளத்தின் படிகள் சிதிலமடைந்தது. கழிவுநீர் தேங்கியது உள்ளிட்ட காரணங்களால், சிறப்பு தன்னிறைவுத் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் குளத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த, 2014ல் பொது மக்களின் பங்காக முதற்கட்டமாக, 25 லட்சம் ரூபாய் மாவட்ட நிர்வாகத்திடம்

ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணி துவக்கப்பட்டது. பணி துவக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது, தண்ணீரில், பாசி படர்ந்து துர்நாற்றம் வீசிவருகிறது. கொசு உற்பத்தி கூடாரமாக உள்ளது. தெப்பக்குளம் சீரமைப்பு பணியை விரைவுபடுத்தி, ஆன்மிக பெருமையை நிலை நிறுத்த, நகராட்சி அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar