பதிவு செய்த நாள்
16
அக்
2018
12:10
காஞ்சிபுரம்: அண்ணா நெசவாளர் குடியிருப்பில் உள்ள ராஜகணபதி கோவிலில், நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட, 47வது வார்டில், அண்ணா நெசவாளர் குடியிருப்பு உள்ளது.இங்குள்ள இரண்டாவது குறுக்கு தெருவில், ராஜகணபதி, பவானி அம்மன், பாலமுருகன் சன்னிதிகள் அமைந்த கோவில் உள்ளது. ஆண்டு தோறும், புரட்டாசி மாதம் நடைபெறும் நவராத்திரி விழா, 8ம் தேதி துவங்கியது.தினமும், காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், இரவில், சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும், பரதநாட்டியம், இசை கச்சேரி, நடன நிகழ்ச்சி போன்றவை நடக்கின்றன. அம்மனை தரிசிக்க, ஏராளமான பக்தர்கள், தினமும் கோவிலுக்கு வருகின்றனர்.