திருக்கோவிலூர்:திருக்கோவிலூர்‚ என்.ஜி.ஜி.ஓ.‚ நகர்‚ ராகவேந்திரர் கோவிலில்‚ நவராத்திரி விழாவை முன்னிட்டு மாணவிகளின் பரதநாட்டியம் நடந்தது.திருக்கோவிலூர்‚ என்.ஜி.ஜி.ஓ.‚ நகர்‚ ராகவேந்திரர் கோவிலில்‚ நவராத்திரி விழா கடந்த 9ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் (அக்., 14ல்) மாலை 6:00 மணிக்கு‚ ராகவேந்திரர்‚ ஆஞ்சநேயர்க்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இரவு 8:00 மணிக்கு‚ கொலு மண்டபத்தில் சிறுவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. 9:00 மணிக்கு அம்பிகைக்கு மகா தீபாராதனை நடந்தது.