பதிவு செய்த நாள்
16
அக்
2018
12:10
திருவள்ளூர்: திருவள்ளூர், கன்யகா பரமேஸ்வரி கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு, மஞ்சள் மற்றும் குங்குமத்தால், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.திருவள்ளூர், கொண்டமாபுரம், கன்யகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா, 10ம் தேதி துவங்கியது.தினமும், கன்யகா பரமேஸ்வரி அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம், ஊஞ்சல் சேவை, தீபாராதனை அர்ச்சனை நடக்கிறது.இந்நிலையில், 14ம் தேதி, மூலவருக்கு மஞ்சள் காப்பு சார்த்தப்பட்டு, குங்குமத்தால் புடவை அணிவித்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வாசவி அருள்பாலித்தார்.இந்த சிறப்பு அலங்காரம் செய்து முடிக்க, ஐந்து மணி நேரம் ஆனதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த அலங்காரத்தை, பக்தர்கள் கண்டு களித்தனர்.வரும், 19ம் தேதி காலை, அக்னி பிரவேசம், மதியம், 12:30 மணிக்கு மற்றும் மாலை, 6:00 மணிக்கு வைஸ்ய சமாராதனை, இரவு, அம்மன் பார்வேட்டை நடைபெறுகிறது.தினமும், உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு துர்கா, லட்சுமி, மகாராணி, மீனாட்சி அலங்காரத்தில், அம்மன் அருள்பாலித்தார்.