பதிவு செய்த நாள்
16
அக்
2018
12:10
பு.புளியம்பட்டி: நவராத்திரி விழாவை முன்னிட்டு, புன்செய்புளியம்பட்டியில் உள்ள, கோவில்கள் மற்றும் வீடுகளில், கொலு பொம்மைகள் வைத்து, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. நவராத்திரி விழா கடந்த 9ல் துவங்கியது.
அன்று முதல் புன்செய்புளியம்பட்டி, சவுடேஸ்வரி அம்மன், காமாட்சியம்மன், பிளேக் மாரியம் மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் கொலு பொம்மைகள் வைத்து, தினமும் வழிபாடு நடத்தப்படுகிறது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகளுடன் பிரசாதம் வழங்கப்படுகிறது. இதேபோல், மக்கள் தங்கள் வீடுகளில், கொலு வைத்து, தினமும், பூஜைக்கு சுண்டல், பொங்கல் படைத்து, கொலு பூஜைக்கு வருவோருக்கு, பிரசாதமாக வழங்குகின்றனர். நேற்று (அக்.,15ல்), பிளேக் மாரியம்மன் கோவிலில், கொலு பொம்மைகள் வைத்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.