உத்தரகோசமங்கை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அருகே வருடாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2018 12:10
உத்தரகோசமங்கை:உத்தரகோசமங்கை அருகே வைகை கிராமத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த அக்.24 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. மண்டல பூஜையை முன்னிட்டு மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகளும், யாகசாலை பூஜைகளும் நடந்தது.
பூஜைகளை மீனாட்சி சுந்தரம் குருக்கள், அன்புமாறன், வசவலிங்கம் ஆகியோர் செய்தனர். மாலையில் விளக்கு பூஜையை கதிரேசன் துவக்கி வைத்தார். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் மற்றும் வைகை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.