பதிவு செய்த நாள்
16
அக்
2018
01:10
ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி, பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். இதனால் காணிக்கை செலுத்த வசதியாக, கோவில் நிர்வாகம் சார்பில், மூன்று இடங்களில் தற்காலிக ஸ்ரீவாரி உண்டியல் வைக்கப்பட்டது. ஒவ்வொரு சனிக்கிழமை இரவும், இவை திறந்து எண்ணப்பட்டன.நான்கு சனிக்கிழமைகள் நிறைவடைந்த நிலையில், இரண்டு லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய் காணிக்கை கிடைத்தது. நிரந்தர உண்டியலில், ஆறு லட்சம் ரூபாய், அர்ச்சனை டிக்கெட் விற்பனையில், 46 ஆயிரத்து, 930 ரூபாய், சிறப்பு தரிசன டிக்கெட் வசூலில், இரண்டு லட்சத்து, 32 ஆயிரம் ரூபாய், விழா நன்கொடையாக, 55 ஆயிரம் ரூபாய் என, 11 லட்சத்து, 59 ஆயிரம் ரூபாய் வசூலானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.