பதிவு செய்த நாள்
16
அக்
2018
01:10
வீரபாண்டி: சேலம், சீரகாபாடி ஸ்ரீதேவி, பூதேவி சமேத காவகிரி பெருமாள் கோவில் புரட்டாசி தேரோட்ட விழாவை முன்னிட்டு நடந்த, திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
புரட்டாசி மாத தேரோட்ட திருவிழா, 10 நாட்கள் நடக்கும். கடந்த, 12ல் காவகிரி பெருமாளுக்கு கல்யாண உற்சவம், 13ல், தேரோட்டம் நடந்தது. நேற்று (அக்., 15ல்) உலக நன்மைக்காக நடந்த திருவிளக்கு பூஜையில், சீரகாபாடி, அரியானூர், வீரபாண்டி சுற்றுவட்டாரங்களை சேர்ந்த, நூற்றுக்கணக்கான பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மலைமேல் உள்ள மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத காவகிரி பெருமாளுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று (அக்., 16ல்) மஞ்சள் நீராட்டு வைபவத்துடன், விழா நிறைவு பெறுகிறது.