பதிவு செய்த நாள்
16
அக்
2018
01:10
அந்தியூர்: அந்தியூர் அருகே உள்ள, பர்கூர் மலைப்பகுதிக்கு உட்பட்ட கத்தரிமலை கிராமம் உள்ளது. இங்கு, பிரசித்தி பெற்ற திருத்தலமான, மங்கம்மாள் மகாலட்சுமி கவுரி, பண்டிகை ஆண்டுதோறும் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை சிறப்பாக நடக்கும். கடந்த 13ல், சனிக் கிழமையன்று தொடங்கிய விழாவில், மலை ஏறுதல், பயிர் பூஜையுடன் நடந்தது.
அதைத்தொடர்ந்து, 14ல், மங்கம்மாள் மகாலட்சுமி அஷ்ட பூஜையும், மகாலட்சுமிக்கு சிறப்பான அபிஷேகமும் நடந்தது. பண்டிகையின் கடைசி நாளான நேற்று, கருட மெரவனையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. பண்டிகையில், கத்தரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.