Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாண்டியன் வருந்தி வரம்பெற்ற பேறு
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 65. திருநடனம் ஆடிய திருச்சிற்றம்பலன்
வெள்ளியம்பல நடனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2018
01:10

திருநடனம் ஆடிய திருச்சிற்றம்பலன்

உலகம் இன்பம், துன்பம் கலந்தது. இருமைதத்துவ உலக ஆழிக்கடலில் முகிழ்ந்தது. எனினும் உயிர்களனைத்தும் துன்பத்தை விரும்புவதில்லை. அவ்வழியே இன்பமும் துன்பமாய் முடிவதைக் கண்ட அனுபவங்களைப் பெற்ற பின் இரண்டுமே கலந்து தான் என ஒருவாறு ஒப்புக்கொண்டனர். ஆதலால் பேரறிவுடைய பெருமக்கள் இறையுணர்வால் பெறுகின்ற இன்பமே நிலைத்தது. அழியாதது என்று முடிவுக்கு வந்தனர். இறைவன் திருவடியைச் சரணடைந்து அதனையே வழிபடுவது இன்பம் பயக்கும் எனக் கண்டுணர்ந்தனர். நடராசர் தாண்டவத்தில் உலகம் இன்பம் கண்டது. படைத்தல் காத்தல் அழித்தல் அருளுதல் மறைத்தல் என ஐந்து தத்துவங்கள் ஆடலின்பத்தில் பிறந்தன.

வெள்ளியம்பல நடனம் :

வெள்ளியம்பலம் இரஜத சபை அதில் ஒரு மாணிக்கப்பீடம் ஞானப்பேரொளி வடிவினான சோமசுந்தரக் கடவுள் தோன்றியது எப்படி? பூத கணங்கள் மொந்தையையும் தன்னுமையையும் முழங்கினர். திரு நந்தி தேவர் முழவன் தாக்கினார். விட்ணு இடக்கையார்த்தார். தும்புரு நாரதர் இசை பாடினார். பஞ்ச துந்துபிகள் ஒலித்தன. சரசுவதி சுதி கூட்டினாள். பிரமன் யாழ் கொண்டு இசை மழை பொழிந்தார். தேவர்கள் கற்பக மலர் பொழிந்தனர்.

சிவபெருமான் முயலகன் மேலே வலப்பாகத்தை வைத்து இடப்பாகத்தை தூக்கி சற்றே வளைத்து ஆடினார். பத்துத் திருக்கரங்கள் வலக்கரங்கள் ஐந்தில் தாக்கும் கரத்தில் சூலம், மற்றவற்றில் தமருகம், பாணம், வாள், மழு, என்பவைகளும் இடக்கரம் ஐந்தில் வரதஹஸ்தத்திலே பாம்பும் மற்றவற்றில் அக்னி வில், கேடகம், தண்டு என்பவைகளும் ஏந்தினார். கழுத்தில் திருநீலகண்டமும், திருச்செவியில் சங்க குண்டலங்களும் இலங்கின செஞ்சடையில் கங்கையும் பிறைச்சந்திரனும் பிறங்கின. திருவெண்ணீரனிந்த திருமேனி நாகையர் நாக யஞ்ஞோபவீதம் பூணூல் மூன்று திருக்கரங்கள் உமாதேவியார் ஒருபுறம் ஒதுங்கி நிற்க அவள் மேல் வைத்த திருநோக்கம் திருநகையும் விளங்கின. அதிரவீசி ஆடினாள் யாருக்காக?

திருக்கல்யாணம் தரிசிக்க வந்த பதஞ்சலியார், வியாக்ரபாதர் முனிபுங்கவர் இருவரும் சிதம்பரத்திலே நியதமாய், இறைவனது நிருத்த தரிசனம் செய்து உண்பவர்கள். இன்று அவ்வாறு தரிசித்த பின்னர் தான் உண்போம் என்று பிரார்த்தித்தனர். இவர்கட்காகவே மேற்கூறிய பராமானந்த தாண்டவம் ஆடினார். அவர்களின் வேண்டுகோளின்படி அவ்வாறே நின்று ஆடி அருள்பாலித்து வருகிறார்.

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 65. திருநடனம் ஆடிய திருச்சிற்றம்பலன் »
பாண்டியன் வருந்தி வரம்பெற்ற பேறு: பிற்காலத்தில் இராச சேகர பாண்டியன் பரதக்கலை தவிர ஏனைய கலைகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar