பாண்டியன் வருந்தி வரம்பெற்ற பேறு: பிற்காலத்தில் இராச சேகர பாண்டியன் பரதக்கலை தவிர ஏனைய கலைகளை பயின்றிருந்தான். கரிகாற் சோழனின் அவைப்புலவன் ஒருவன் வந்து இவனுக்கு தெரியாத பரதக்கல்லை சோழனுக்குத் தெரியும் என்று கூறினான். அவமானம் ஏற்பட்டு பரதக்கலை கற்கலானான் பாண்டியன். பரத சாஸ்திரத்தின் சிவ பெருமான் ஒருவருக்குத்தான் சிரசின் மேல் அஞ்சலி செலுத்த வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. அவனே முழுமுதற் கடவுளான். மற்றை யோருக்கு எட்டிக்கு நேரே அஞ்சலி விதிக்கப்பட்டது. இராஜ சேகரன் பரதம் பயிலுங்கால் தன் கால் நோகுவதைக் கண்டு இந்த வருத்தம் வெள்ளியம்பலக் கூத்தாடிக்கும் உண்டே என்று இரங்கினான்.
அன்று சிவராத்திரி இரவு நான்குயாமமும் விசேட பூஜை நிகழ்வித்தான். வணங்கிக் கண்ணீர்ச் சோர சிரசின் மீது கைகூப்பி எம்பெருமானே நின்ற திருவடியை எடுத்து வீசி எடுத்த திருவடியை கீழே ஊன்றி இன்றைக்கு அடியேன் காணும்படி மாறியாடித் தமையனுடைய வருத்தம் முழுவதையும் தீர்த்தருள வேண்டும் இல்லையேல் இறந்து விடுவேன் என்று கூறி தன் உடைவாளை நாட்டி அதன் மேலே குப்புற விழப்புகுந்தான்.
அன்பர்க்கரியராகிய சிவபெருமான் கால்மாறி ஆடிக் காட்சி தந்தனர். இராச சேகரன் வணங்கி இந்த திருநடனம் யாவரும் தரிசிக்கும்படி எக்காலத்தும் இப்படியே நின்றருள வேண்டும் என வேண்டினான். அவ்வாறே இறைவன் இன்றும் அருள் செய்கிறார்.
பரமானந்தம் பத்துத் திருக்கரங்களுடன் ஆடும் காட்சி எங்கும் இல்லை. ஏழுவகைத் தாண்டவங்களுள் பரமானந்தத் தாண்டவம் இதுவேயாகும். சொக்கர் தாண்டவம் என்றும் இதனைக் கூறுவர். இறைவன் உயிர்களை ஆட்டுவிக்கும் நட்டுவர். அவர் ஆடவில்லை எனில் உயிர்கள் ஆடி ஓடா. ""காட்ட வனல்போல் கலந்துயிரையெல்லாம் ஆட்டுமொரு நட்டுவன் எம்மன்னரென எண்ணாய் என்பது வாதவூரடிகள் புராணம். எனவே ஆறும் கடவுளும் பரத சாஸ்திரத்திற்கு தலைவனும் பரதம் எனப்படும் இறைவரே. இதனால் சிவபெருமான் விளங்கும் நாடாகிய நமது தேசத்திற்கும் பரத நாடு என்ற பெயரும் உண்டாயிற்று. இந்த தாண்டவத்தைக் கண்ட ஞான சம்பந்தர் பாடுகிறார்.
என்று நாமும் பாடுவோமாக. அதிரவீசியாடுகின்ற அழகனின் ஆடலே ஆடல். அந்த ஆடலே இன்ப வடிவானது. அவ்வின்பத்துள் முழ்குவோரே துன்பத்தை வெல்ல வல்லவர். துன்பம் போக்க விரும்புபவர்கள் ஒரு முறை வெள்ளியம்பல திருக்கூத்தினை வழிபட்டு அழியாத பேரின்பத்தை அடைவாராக...
தாண்டவங்கள் ஆறு : 1. ஆனந்த தாண்டவம் பொது - சிதம்பரம் - பொன்னம்பலம் 2. படைத்தல் - முனிதாண்டவம் : திருநெல்வேலி - தாமிரசபை 3. காத்தல் - சந்தியா தாண்டவம் : மதுரை வெள்ளியம்பலம் 4. அழித்தல் - சம்ஹார தாண்டவம் : திருக்கடவூர் மயானம் 5. மறைத்தல் - திரிபுர தாண்டவம் : குற்றாலம் சித்திர சபை 6. அருளல் : காளி தாண்டவம் : திருவாலாங்காடு
நின் ""ஆடல் இவ்வுலகையே ஆடச்செய்த நாட்டிய நாடகமோ! இக்கதை அறிவோம் யாம். எம் கதை தழுவியது நின் ""நிருத்தியம் பாவங்களை ஆடல் பாவங்கள்த் தழுவியதோ! நின் ""நிருத்தம் உலகமும் அதில் தோன்றிய அத்தனையும் நின் நிருத்தத்திற்கு தாளமோடு ஆடிக் கொண்டிருக்கனவே! பெருவெளியில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும் அவ்வெளி
நிறைந்த ஓம் ஒலியே! எம் நெஞ்சப்பையின் அசைவிலும் துடிப்பிலும் நின் திருநடனமோ! அஃதில் தோன்றும் ஒளியே நீ ஆவாய் அன்றே! அங்கு ஒலிக்கும் ""ம் ஒலியே முதல் எழுத்தின் காரண ஒலியோ! அஃதன்றி நினது பாதமெழுப்பும் சிலம்பொலியோ!
ஓம்...ஓம்...ஓம் ம்...ம்...ம்...ம்...ம்.. முடிவற்ற ஓங்கார ஒலியோ... இதனை உணர்ந்தோரே எம்பெரியோர். எம்முன்னோர். எம் மூதாதரையாய் விளங்கும் முனிபுங்கவர்களோ. இவ்விடலிற்கு இன்றியமையா அங்கம் நெஞ்சப்பை எனின் நிலவுலகின் நெஞ்சப்பை தில்லையான் ஊராம் சிதம்பரமோ. அங்கிங்கெனாதபடி எங்கனும் இடைவிடாது நின்நாட்டம் நாடகம், நடனம் எவ்வுயிருக்குமாய் ஆனந்தத் தாண்டவமோ!!!!!