பதிவு செய்த நாள்
23
அக்
2018
01:10
சென்னிமலை: ஈங்கூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, 25ல் நடக்கிறது. ஈங்கூர் மாரியம்மன் கோவிலில், ஐப்பசி மாதத்தில், பொங்கல் விழா நடக்கிறது. நடப்பாண்டு விழா, கடந்த, 16ல் பூச்சாட்டுதல், அம்மை அழைத்தல், கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் சிறப்பு பூஜை மற்றும் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. கம்பத்துக்கு பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி, வேப்பிலை அலங்காரம், மஞ்சள் பூசியும் வழிபாடு நடத்தி வருகின்றனர். வரும், 25ல் மாவிளக்கு மற்றும் பொங்கல் விழா நடக்கிறது. அன்று காலை முதல் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலி கொடுத்தும், மக்கள் வழிபடுவர்.