பதிவு செய்த நாள்
23
அக்
2018
01:10
பு.புளியம்பட்டி: குட்டகம் கிராம, மாரியம்மன் கோவில் திருவிழாவில், விவசாயம் செழிக்க வேண்டி, பக்தர்கள் தங்கள் உடம்பில், சேறு பூசி, நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அடுத்த, குட்டகம் கிராமத்தில், அத்தனூர் அம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இங்கு, கம்பம் திருவிழா, கடந்த 13ம் தேதி பூச்சாட்டு தலுடன் துவங்கியது. 14ம் தேதி கம்பம் நடுதலை தொடர்ந்து, அத்தனூர் அம்மனுக்கு, பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் வழிபட்டனர். திருவிழாவில் தினமும் இரவு, ஒயிலாட்டம், கம்பம் ஆடுதல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று 22 ல், காலை மாரியம்மனுக்கு, மாவிளக்கு பூஜை, தொடர்ந்து, பொங்கலிட்டு, மாரியம் மனுக்கு படையல் வைத்து, பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். திருவிழாவில், விவசாயம் செழிக்க வேண்டி, பக்தர்கள் தங்கள் உடம்பில், சேறு பூசி, வேப்பிலை அணிந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மாலையில், கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவில், புன்செய்புளியம்பட்டி, சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (அக்.,23) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.