பதிவு செய்த நாள்
23
அக்
2018
01:10
கிருஷ்ணகிரி: கன்னிமேடு காளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று (அக்.,22ல்) நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த, கந்திகுப்பம் கன்னிமேடு காளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று (அக்., 22ல்)நடந்தது.
இதையொட்டி, நேற்று முன்தினம் (அக்., 21ல்) மாலை திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, விநாயகர் வழிபாடு ஆகியவை நடந்தது. தொடர்ந்து, முதற்கால வேள்விகள் நடந்தன. நேற்று (அக்., 22ல்) காலை திருப்பள்ளி எழுச்சியும், இரண்டாம் கால வேள்வியும் நடந்தது. பின்னர், திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. காலை, 9:30 மணிக்கு வாகீஸ்வரி அம்மை சமேத காளீஸ்வரருக்கு கும்பாபிஷேக விழாவும், திருமஞ்சன நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில், கந்திகுப்பம் பைரவ சுவாமிகள் பூஜைகளை நடத்தினார். இதில், கந்திகுப்பம், கன்னிமேடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.